சூலூரில் இருந்து சொந்த ஊருக்கான இறுதிப்பயணம் – போர்விமானி நமன்ஸ் சியால்

Date:

துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்குப் பின்னர் விபத்தில் உயிரிழந்த போர்விமானி விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உடல், அரசு மரியாதைக்குரிய முறையில் சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசம், காங்க்ராக்கு அனுப்பப்பட்டது.

துபாயில் கடந்த 21ம் தேதி சர்வதேச விமானக் கண்காட்சியின் போது சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்த “தேஜாஸ்” போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விங் கமாண்டர் நமன்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடல் முதலில் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு விமான படை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் பிற அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதிச் சின்னமாக அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின், விங் கமாண்டர் நமன்ஸ் உடல் அவரது சொந்த ஊர் காங்க்ரா, இமாச்சலப் பிரதேசத்திற்கு இறுதிப் பயணத்திற்கு அனுப்பப்பட்டது, அங்கு குடும்பத்தினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: அங்குள்ள இந்தியர்களுக்குத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: அங்குள்ள இந்தியர்களுக்குத்...

சாகோஸ் தீவு விவகாரம்: மாலத்தீவுகளுடன் தூதரக உறவைத் துண்டித்தது மொரீஷியஸ்!

சாகோஸ் தீவு விவகாரம்: மாலத்தீவுகளுடன் தூதரக உறவைத் துண்டித்தது மொரீஷியஸ்! போர்ட் லூயிஸ்:...

வானில் அரங்கேறும் அதிசயம்: இன்று ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் – கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடு!

வானில் அரங்கேறும் அதிசயம்: இன்று ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் -...

கும்பகோணத்தில் பரபரப்பு: “ரூ.3 லட்சம் பட்டுப்புடவைக்கு பணம் தரவில்லை” – ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பிரமுகர் போஸ்டர்!

கும்பகோணத்தில் பரபரப்பு: "ரூ.3 லட்சம் பட்டுப்புடவைக்கு பணம் தரவில்லை" - ஓபிஎஸ்-க்கு...