சென்னை மாநகராட்சி சார்பில் நகரில் 7 இடங்களில் நடைபெற்ற சிறப்பு ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமில், 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் தகவல்:
சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுதல் கட்டாயம். உரிமையாளர்கள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு, மைக்ரோசிப் பொருத்திக்கொள்ள வேண்டும். பதிவு செய்தால், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்.
சேவைகள் வழங்கும் மையங்கள்:
திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில் தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சிறப்பு முகாம்கள்:
செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு எளிதில் சேவை கிடைக்க, கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, மேலே பட்ட 6 மையங்களிலும், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் முகாம்கள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற முகாமில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் வழங்கப்பட்டது. புளியந்தோப்பில் நடைபெற்ற முகாமை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டார்.
சென்னையில் இதுவரை மொத்தம் 10,820 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 23-ம் தேதி, மேற்கண்ட 7 இடங்களிலும் நடைபெற உள்ளன.