2021-இல் வெளிவந்து வெற்றி பெற்ற போயபதி ஸ்ரீனு இயக்கிய ‘அகண்டா’ படத்தில், நடிகர் பாலகிருஷ்ணா இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
ஃபேன்டஸி–ஆக்ஷன் வகையில் உருவான இந்த படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.
படத்தின் முதல் பாடலான ‘தாண்டவம்’ சிங்கிள் மும்பை ஜூஹுவில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது. பக்தி ரீதியான இந்தப்பாடலை சங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கெர் பாடியுள்ளனர்.
இந்த பாடலில், கோயிலின் புனித சூழலில் ஓம் மந்திரங்கள் ஒலிக்க, பாலகிருஷ்ணா சிவனின் தாண்டவ நடனத்தை ஆடுகிறார். தற்போது இந்த பக்திப் பாடல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படம் டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.