ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு

Date:

சைல்ஹெட், வங்கதேச: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடக்கிறது.

டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி, முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பார்ரி மெக்கார்த்தி 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2-வது நாள் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 92.2 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, பார்ரி மெக்கார்த்தி 31 மற்றும் மேத்யூ ஹம்ப்ரிஸ் 0 ரன்களில் வெளியேறினர்.

வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்களை, ஹசன் முராத், தைஜூல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து, வங்கதேச அணி 2-வது நாள் முடிவில் 85 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.

வீரர்கள் பங்களிப்பு:

  • தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 80 ரன்கள் எடுத்தார்.
  • மஹ்முதுல் ஹசன் ஜாய் 283 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 169 ரன்கள் விளாசினார்.
  • மொமினுல் ஹக் 124 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் சேர்த்தார்.

வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் கைவசம் வைத்த நிலையில், 52 ரன்கள் முன்னிலையில், இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உதகை: குடியிருப்புக்குள் புகுந்து ‘ஜாலியாக’ ஓய்வெடுத்த கரடி – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

உதகை: குடியிருப்புக்குள் புகுந்து 'ஜாலியாக' ஓய்வெடுத்த கரடி - வைரலாகும் சிசிடிவி...

திருவாரூர்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து லாரி அட்டகாசம் – காவல் ஆய்வாளர் வீடு மற்றும் கார் சேதம்!

திருவாரூர்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து லாரி அட்டகாசம் - காவல் ஆய்வாளர்...

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...