கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: ஆட்சியர் உத்தரவு
கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்களை ஆட்சியர் மீ. தங்கவேல் நேற்று (அக். 14) பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- மண்மங்கலம் வட்டாட்சியர் பெ. மோகன்ராஜ் → கரூர்
- அங்கிருந்த ஆர். குமரேசன் → டாஸ்மாக் உதவி மேலாளர்
- எஸ். மதிவாணன் → குளித்தலை (இருப்பு கரூர்) ஆதி திராவிட நல தனி வட்டாட்சியர்
- பி. சத்தியமூர்த்தி → மண்மங்கலம் வட்டாட்சியர்
- கடவூர் வட்டாட்சியர் பெ. மணிவண்ணன் → புகழூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்
- எம். பிரபா → புகழூர் வட்டாட்சியர்
- கே. தனசேகரன் → (தேர்தல்கள்) தனி வட்டாட்சியர்
- சு. முருகன் → பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர்
- வருவாய் அலகு வட்டாட்சியர் அ. ஈஸ்வரன் → அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர்
- ஆர். விஜயா → கிருஷ்ணராயபுரம்
- கி. பிரபாகர் → அரவக்குறிச்சி
- என். மகேந்திரன் → கரூர் நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர்
- வை. அமுதா → கரூர் தேசிய நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர்
- எஸ். சந்தானசெல்வன் → அரவக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்
- எம். பி. அமுதா → கரூர் டாஸ்மாக் மேற்பார்வை அலுவலர்
- கே. யசோதா → மண்மங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்
- எம். ராஜாமணி → கடவூர் வட்டாட்சியர்
புதிய பணியிடங்களில் உடனே பணியேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வுத்தரவு தொடர்பாக மேல்முறையீடு அல்லது விடுப்பு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட பணியேற்பிடை காலத்தினை விட கூடுதலாக எடுக்கப்படும் விடுப்புகள், மருத்துவ சான்றில்லா ஊதியமில்லாத அசாதாரண விடுப்பாகக் கருதப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments Box