கள்ளக்குறிச்சியில் ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு – நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிதியுதவி வழங்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கள்ளக்குறிச்சி மாவட்டம் மூப்பனார் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகள் சவுமியா (14) கடந்த 10 ஆம் தேதி மாலை பூட்டை கிராம எல்லையில் உள்ள ஆற்றில் துணி துவைக்கும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.”

அவர் மேலும் தெரிவித்துள்ளார்:

“இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.”

Facebook Comments Box