கரூர் அருகே ரூ.4.85 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ரூ.4.85 கோடியே பணிகளுக்கான தொடக்க விழா இன்று (அக்.12) நடைபெற்றது.
கரூர் அருகே உள்ள காதப் பாறை ஊராட்சி பூர்ணிமா கார்டனில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.80 லட்சம் மதிப்பில் தார் சாலையை பலப்படுத்தும் பணி தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சரவணன், மண் மங்கலம் வட்டாட்சியர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, ஏஐபீஏ நகரில் ரூ.27.33 லட்சம் மதிப்பில் தார் சாலை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. கரூர் காதப் பாறை ஊராட்சியில் சிறப்பு நிதி (சேமிப்பு நிதி) 2025–2026 திட்டத்தின் கீழ் அன்பு நகரில் ரூ.64.16 லட்சம், பிரேம் நகரில் ரூ.26.57 லட்சம், காந்தி நகரில் ரூ.70.64 லட்சம் மதிப்பில் தார் சாலை மேம்பாடு செய்யப்பட்டது.
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் (2025–2026) திட்டத்தின் கீழ் தங்கம் நகரில் ரூ.39.31 லட்சம், முத்து நகரில் ரூ.34.31 லட்சம், நெரூர் தெற்கு ஊராட்சி வேடிச்சிபாளையம் காட்டுத் தெருவில் ரூ.16.16 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டன.
மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் சிறு கனிம நிதி 25% திட்டம் (2025–2026) அடிப்படையில் ரூ.20 லட்சம் மதிப்பில் புல்லா கவுண்டன்புதூரில் 60,000 லிட்டர், ரூ.22 லட்சம் மதிப்பில் நெரூர் மேற்கு தெருவில் 1 லட்சம் லிட்டர், திருமுக் கூடலூரில் 1 லட்சம் லிட்டர் நீர் தேக்கத்தொட்டி அமைத்து குழாய் விரிவாக்க பணி செய்யப்பட்டது.
அரசு காலனி காந்தி நகர் 2 மற்றும் 4-வது தெருக்களில் ரூ.22 லட்சம், நெரூர் வடக்கு ஊராட்சியில் மூன்று இடங்களில் ரூ.8 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம், சோமூர் ஊராட்சி திருமுக்கூடலூரில் ரூ.8 லட்சம், மற்றொரு இடத்தில் ரூ.14.30 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டன.
ஒத்தக்கடை கரூர் மெயின் ரோடு முதல் கால்நடை மருத்துவமனை வரை ரூ.11 லட்சம் மதிப்பில் சாலை பலப்படுத்தும் பணி, சோமூரில் ரூ.5.40 லட்சம் மதிப்பில் புதிய கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட மொத்தம் ரூ.4.85 கோடியே புதிய திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.