ரவுடி நாகேந்திரன் உயிரோடே உள்ளார்; போலீஸார் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்பிக்க வைத்தனர்” – பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் அதிர்ச்சித் தகவல்

Date:

“ரவுடி நாகேந்திரன் உயிரோடே உள்ளார்; போலீஸார் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்பிக்க வைத்தனர்” – பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் அதிர்ச்சித் தகவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் இன்னும் உயிரோடே உள்ளார் என்றும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் அவரை தப்பிக்க வைத்துள்ளனர் என்றும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பி. ஆனந்தன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2024 ஜூலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்த நாகேந்திரன் கடந்த மாதம் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆம்ஸ்ட்ராஙின் சகோதரர் கீனோஸின் சார்பில் ஆஜராகிய ஆனந்தன், நீதிமன்றத்தில் கூறியதாவது:

> “நாகேந்திரன் உண்மையில் இறக்கவில்லை. அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் மறைத்து வைத்துள்ளனர். இறந்ததாக கூறப்படும் உடலுக்கும் நாகேந்திரனின் உருவத்துக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. பல மர்மங்கள் இதில் மறைந்துள்ளன.”



அவர் மேலும், “இந்த சூழலில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவம்பர் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுவது அவரை ஒரு ‘கிங் மேக்கர்’… சக்தியாக மாற்ற அதிக வாய்ப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுவது அவரை ஒரு 'கிங்...

தவெக-வின் தற்போதைய நிலைப்பாடு… அதிமுக கூட்டணியில் இணையாதது ஏன்? சமீபத்திய வதந்திகள்…!

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக), அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணியில்...

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: “தி ஹண்ட்ரட்” தொடரில் வெடித்த சர்ச்சை!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: "தி ஹண்ட்ரட்" தொடரில்...

போர் பதற்றத்திற்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை!

போர் பதற்றத்திற்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: இந்தியர்களின்...