தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் ஐஏஎஸ் பதவி உயர்வு

Date:

தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் ஐஏஎஸ் பதவி உயர்வு

தமிழக மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் 5 உயரதிகாரிகளுக்கு ஐஏஎஸ் பதவி அளித்து மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் சார்பு செயலர் பூபீந்தர் பாய் சிங் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு குடிமையியல் சேவை அதிகாரிகள் எஸ். கவிதா, சி. முத்துக்குமரன், பி. எஸ். லீலா அலெக்ஸ், எம். வீரப்பன், ஆர். ரேவதி ஆகியோர் குடியரசுத் தலைவர் கட்டளையின்படி இந்திய நிர்வாக சேவையில் (IAS) இணைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றுள்ள எஸ். கவிதா தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளராகவும், சி. முத்துக்குமரன் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணை இயக்குநராகவும், பி.எஸ். லீலா அலெக்ஸ் சென்னை சிப்காட் பொது மேலாளராகவும், எம். வீரப்பன் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும், ஆர். ரேவதி கங்கைகொண்டான் சிப்காட் தொகுதியில் நில எடுப்பு வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு

நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு நீலகிரி: பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ‘ரிவால்டோ’...

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி திருச்சி: இயற்கை...

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம் காரைக்கால்: “ராகுல் காந்தி பொய்...

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம் ஈர்ப்பு

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம்...