சென்னை ஓபன் டென்னிஸ்: தொடர்ந்து 2-வது நாளும் போட்டிகள் ரத்து
நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர், முன் திட்டமிடப்பட்டபடி இரண்டு நாட்களாக தொடங்க முடியாமல் உள்ளது.
முன்தினம் தொடங்க வேண்டிய போட்டிகள், மோந்தா புயலால் பெய்த மழை காரணமாக ஆடுகளங்களில் தண்ணீர் தேங்கியதால் ஒத்திவைக்கப்பட்டன. அவை நேற்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த மழையால், மதியம் 12 மணிக்கும் பின்னர் அறிவிக்கப்பட்ட 2.30 மணிக்கும் ஆட்டங்களை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2-வது நாளும் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, இன்று 3-வது நாளிலிருந்து போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெறும். மேலும், இன்று அனைத்து ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களும் நடத்தப்படவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.