அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் வாழ்த்து!
கோவை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் தோன்றி, ஆங்கிலேயர்களைத் தீரத்துடன் எதிர்த்த மாவீரன் தீரன் சின்னமலையைப் போல, தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு அசாத்திய செயல்வீரராகத் திகழும் எங்கள் நாயகன் அண்ணாமலைக்கு, இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் விலகல் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், அர்ஜுன் சம்பத்தின் இந்தத் தீவிரமான பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.





