• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

“திருவள்ளுவர் பிறந்தநாள்: வைகாசி அனுஷமாக அறிவிக்க உத்தரவிட முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

athibantv by athibantv
செப்டம்பர் 18, 2024
in Tamil-Nadu
0
“திருவள்ளுவர் பிறந்தநாள்: வைகாசி அனுஷமாக அறிவிக்க உத்தரவிட முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 📋

“திருவள்ளுவர் பிறந்தநாள்: வைகாசி அனுஷமாக அறிவிக்க உத்தரவிட முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

திருவள்ளுவரின் பிறந்த நாளை வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தற்போது தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள், அதாவது தை மாதம் 2-ம் தேதி ‘திருவள்ளுவர் தினமாக’ அரசு விடுமுறையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், “மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களின் கூற்றுப்படியும், 600 ஆண்டுகள் பழமையான மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் வழக்கப்படியும், திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தார்; எனவே, அந்நாளை அவரது பிறந்த நாளாக அரசு அறிவிக்க வேண்டும்” என திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சாமி தியாகராஜன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வாதத்திற்குத் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். தற்போது கொண்டாடப்படும் தை 2-ம் தேதியானது திருவள்ளுவரைப் போற்றும் ஒரு ‘தினமே’ தவிர, அது அவரது ‘பிறந்த தினம்’ என அரசிடம்கூட எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், வைகாசி அனுஷத்தில் தான் அவர் பிறந்தார் என்பதற்கு எந்தவொரு தீர்க்கமான வரலாற்று ஆதாரமோ, ஆவணங்களோ இல்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

Related posts

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026

நீதிமன்றத்தின் முக்கியக் கருத்து: 1,330 குறள்கள் மூலம் உலகப் பொதுமறையைத் தந்து மனித குல வாழ்வியலுக்கு வழிகாட்டிய திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கண்டறிய நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியது. ஆனால், அவர் வைகாசி அனுஷத்தில் தான் பிறந்தார் என அறுதியிட்டுக் கூற எந்தவொரு வரலாற்றுச் சான்றும் கிடைக்கவில்லை.

ஆதாரங்கள் இல்லாத நிலையில், குறிப்பிட்ட ஒரு நாளைப் பிறந்த நாளாக அறிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். அதேசமயம், மனுதாரர் சார்ந்த அமைப்புகள் தங்களது விருப்பப்படி வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று திருவள்ளுவர் பிறந்த நாளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

முதலில் சிலுவை, பிறகு தேவாலயத்தை கட்டுங்கள்…! ஆக்கிரமிப்பு மலை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

Next Post

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடியதால் மகன் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது

Next Post

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடியதால் மகன் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!
  • திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
  • ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN