சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் மகளிருக்கு மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் மகளிர் நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், உங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box