“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் விஜய், “தற்போதைய அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தைப் (தவெக) காட்டிலும், திமுக 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளில் எதையும் மறைக்கவில்லை என்பதற்கு நேரலையே சாட்சி. ஆனால், பெரும்பான்மை பெறவில்லை என உதயநிதி தொடர்ந்து அரதப் பழைய வாதத்தையே முன்வைத்து வருகிறார்” என்று சாடினார்.
மேலும், தனது கட்சியின் பலம் குறித்துப் பேசிய அவர், “நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இயங்கவில்லை; மக்களின் உண்மையான உணர்வுகளை நம்பித்தான் களத்தில் இருக்கிறோம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போலச் செயல்படும் திமுகவிற்கு, எப்போதும் யதார்த்தம் புரிவதே இல்லை” என விமர்சித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிக்குப் பிறகு, ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே இந்த அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.




