• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஜூன் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

264 ரன் அடிச்சும் பலன் இல்லையே! வீடியோ கேம் மோடில் டெல்லியை ‘பஞ்சு பஞ்சாக’ பறக்கவிட்ட பஞ்சாப் கிங்ஸ்!

athibantv by athibantv
ஏப்ரல் 26, 2026
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.1K 🔥 📋

264 ரன் அடிச்சும் பலன் இல்லையே! வீடியோ கேம் மோடில் டெல்லியை ‘பஞ்சு பஞ்சாக’ பறக்கவிட்ட பஞ்சாப் கிங்ஸ்!

புது தில்லி: டி20 கிரிக்கெட் இப்போது பேட்ஸ்மேன்களின் கையில் இருக்கும் வீடியோ கேம் போல மாறிவிட்டது என்பதற்கு இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியே சாட்சி. 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி சாதனை படைத்துள்ளது.

ராகுலின் ருத்ரதாண்டவம் – தப்பிய கேட்ச்.. தவித்த பஞ்சாப்! டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல். ராகுல் 12 ரன்களில் இருந்தபோது கொடுத்த சுலபமான கேட்சை ஷஷாங்க் சிங் கோட்டை விட்டார். விக்கெட் விழுந்துவிட்டது என அர்ஷ்தீப் சிங் முன்கூட்டியே கொண்டாட, அது ஏமாற்றத்தில் முடிந்தது. அந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திய ராகுல், அதன்பின் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 152 ரன்களைக் குவித்து, ஐபிஎல் வரலாற்றின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து சாதனை படைத்தார். நிதிஷ் ராணாவின் அதிரடியும் சேர, டெல்லி அணி 20 ஓவரில் 264 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது.

Related posts

சிஎஸ்கேவிற்கு பிளே ஆப் வாய்ப்பு இன்னும் இருக்கா?… தகுதி பெற என்னென்ன நடக்கணும்? – முழு விவரம்!

மே 19, 2026

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!

மே 16, 2026

பவர் பிளேவில் அரண்டு போன டெல்லி! 265 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே ‘அட்டாக்’ மோடில் இருந்தது. பவர் பிளே முடிவதற்குள்ளேயே விக்கெட் இழப்பின்றி 116 ரன்களை விளாசி, டெல்லி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

வெளுத்து வாங்கிய மும்மூர்த்திகள்: விக்கெட் விழுந்தாலும் ரன் வேகம் குறையவே இல்லை. வீடியோ கேமில் பந்துகளைப் பறக்கவிடுவது போல பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினர்:

  • பிரயன்ஷ் ஆர்யா: 17 பந்துகளில் 43 ரன்கள்.
  • பிரப்சிம்ரன் சிங்: 26 பந்துகளில் 76 ரன்கள்.
  • ஷ்ரேயஸ் ஐயர்: 36 பந்துகளில் 71 ரன்கள்.

இந்த மும்மூர்த்திகளின் அசுர வேக ஆட்டத்தால், இன்னும் 7 பந்துகள் மீதமிருக்கையிலேயே (18.5 ஓவர்) பஞ்சாப் அணி இலக்கை எட்டிப் பிடித்து ‘சோலியை முடித்தது’.

தொடரும் பஞ்சாப் ஆதிக்கம்: இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத ஒரே அணி என்ற பெருமையுடன் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. 300 ரன்களே அடித்தாலும் சேஸ் செய்யலாம் என்ற நிலைக்கு இன்றைய டி20 ஆடுகளங்கள் மாறியிருப்பது பவுலர்களுக்குப் பெரும் சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

வெயிலின் தாக்கம்: பட்டாசு மருந்து கலக்கும் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு – மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிரடி உத்தரவு!

Next Post

வாஷிங்டனில் அதிர்ச்சி: அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – மர்மநபர் அதிரடி கைது!

Next Post

வாஷிங்டனில் அதிர்ச்சி: அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – மர்மநபர் அதிரடி கைது!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

ஜூன் 18, 2026
பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம்: விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம்: விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

ஜூன் 18, 2026
78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI: விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை புனரமைப்புப் பணிகள் – ஒரு சிறப்புப் பார்வை!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI: விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை புனரமைப்புப் பணிகள் – ஒரு சிறப்புப் பார்வை!

ஜூன் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!
  • பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம்: விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!
  • 78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI: விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை புனரமைப்புப் பணிகள் – ஒரு சிறப்புப் பார்வை!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

ஜூன் 18, 2026
பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம்: விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம்: விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

ஜூன் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN