கொள்ளையடித்த பணத்தை வழங்குகிறது திமுக; தேர்தலுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
கடந்த காலங்களில் கொள்ளையடித்த பணத்தைத்தான் திமுகவினர் தற்போது வாக்காளர்களுக்குப் பணமாக வழங்கி வருவதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மேட்டூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து மேச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக இந்தத் தேர்தலுக்காக மட்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். “முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள மற்ற அனைத்துக் குடும்பங்களும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்” என்று சாடிய அவர், தமிழகத் தாய்மார்கள் ஒருவர்கூட திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மக்களுக்கு விரோதமான, கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் திமுகவை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்றும், அந்த அணியின் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.




