“தோல்விகளை மறைக்க ஸ்டாலின் எடுக்கும் ஆயுதம் தொகுதி மறுவரையறை” – தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!
திமுக அரசின் மோசமான ஆட்சியையும் அதன் தோல்விகளையும் மறைப்பதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் ‘தொகுதி மறுவரையறை’ என்ற விவகாரத்தை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குச் சென்ற அவர், அங்கு சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு மடத்தின் சார்பில் குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்கெட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஒட்டுமொத்த ஆட்சியின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ஸ்டாலின் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் எதைச் செய்தாலும் அது ஒரு ‘நாடகம்’ தான் என்றும் சாடினார். தேர்தல் நெருங்கும் வேளையில் மக்கள் உண்மைகளை உணர்ந்துள்ளதாகவும் அவர் தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.





