தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: சென்னையில் விதிமீறல் புகாரில் நடவடிக்கை!
சென்னையில் பரப்புரை மேற்கொண்டபோது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் என்.ஆனந்திற்கு ஆதரவாக விஜய் அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது தி.நகர் பகுதியில் நடத்தப்பட்ட ‘ரோடு ஷோ’ (Road Show) நிகழ்வின் போது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மக்கள் கூடியதாகவும், உரிய அனுமதியின்றி இந்த வாகனப் பேரணி நடத்தப்பட்டதாகவும் தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் மாம்பலம் காவல்துறையினர், தவெக தலைவர் விஜய் உட்பட மூன்று பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னணித் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





