வெளிநாட்டுப் பங்கு விவகாரம்: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்குமாறு திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான விளக்கங்களை இருதரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.