கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
விஷயம் அறிந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரைச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மகளை இழந்து தவிக்கும் அந்தப் பெற்றோருக்குத் தார்மீக ரீதியாக ஆறுதல் கூறிய அவர், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



