பட்ஜெட் பெயரில் ‘காதுகுத்து விழா’ – திமுக அரசை விமர்சித்த அதிமுக
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை விமர்சித்து, திமுக அரசு ‘பட்ஜெட்’ என்ற பெயரில் மக்களுக்கு காதுகுத்து விழா நடத்தி வருவதாகக் கூறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் விமர்சனப் பிரசுரங்களை வழங்கினர். அதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு மாபெரும் ‘காதுகுத்து விழா’ நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டும் அது வெகு விமர்சையாக நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக்கும் மொய் வைக்கலாம் எனக் கிண்டலாக அந்த துண்டுப் பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்தது