உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி அதிருப்தி
உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக, உக்ரைன் அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற ஜெலன்ஸ்கி, பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும் என்பதே உக்ரைனின் விருப்பம் என தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தரப்பில் இருந்து உக்ரைனுக்கு சற்றே அழுத்தம் கொடுக்கப்படுவதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும், சமரசம் என்பது இருதரப்புக்கும் சமநிலையுடன் அமைய வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.