பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்
பிப்ரவரி 20-ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் என்றும், நாளையும் நாளை மறுநாளும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.