7 நாட்கள் காலக்கெடு: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விடுதலைக்கு பலூச் அமைப்பு நிபந்தனை

Date:

7 நாட்கள் காலக்கெடு: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விடுதலைக்கு பலூச் அமைப்பு நிபந்தனை

பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் (BLA) கட்டுப்பாட்டில் உள்ள 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விடுவிக்க, பாகிஸ்தான் அரசுக்கு ஒரு வார காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலூச் போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், இந்த காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் தெரிவித்துள்ளது. நிபந்தனை நிறைவேற்றப்படாவிட்டால், கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ‘ஆபரேஷன் ஹெரோப்’ என்ற இரண்டாம் கட்ட தாக்குதலின்போது, பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பலூச் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பெண் தற்கொலைப் படை வீரர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 17 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைதாக்கப்பட்டனர். இதில், பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த 10 பேர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மீதமிருந்த 7 வீரர்கள் மீது போர்க்குற்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை, பலூச் மக்களை கட்டாயமாக காணாமல் ஆக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பலூச் தேசிய நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், அவர்களிடம் விளக்கம் பெறப்பட்டு வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

விசாரணை முடிவில், 7 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சர்வதேச போர் விதிமுறைகளின் அடிப்படையில், கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு 7 நாள் கருணைக் காலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த காலக்கெடுவில், பலூச் போர்க் கைதிகளை விடுவித்தால், பாகிஸ்தான் வீரர்களை பரிமாறிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலூச் அமைப்பின் ஊடகப் பிரிவு ஹக்கல் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு தொடங்கி ஒரு நாள் கடந்தும், இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசின் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

சொந்த வீரர்களின் உயிரைக் காக்க பாகிஸ்தான் அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா, அல்லது மௌனம் காக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள...

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ...

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம்

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம் டெல்லியில் நடைபெறும்...

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம்

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம் கோவை அரசு மருத்துவமனை...