சட்டவிரோத ஆயுத கிடங்குகள் தகர்ப்பு: 15,000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்

Date:

சட்டவிரோத ஆயுத கிடங்குகள் தகர்ப்பு: 15,000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்

ரஷ்யாவின் 37 பிராந்தியங்களில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கிடங்குகள் மீது பாதுகாப்பு அமைப்புகள் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், 15,000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பு, சட்டவிரோதமாக ஆயுத உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக இந்த விரிவான நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 37 பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், அதிக அளவில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள், கையெறி குண்டுகள், சக்திவாய்ந்த வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பெரு நாட்டில் ‘பிசாசுகளின் இறக்கம்’ திருவிழா கோலாகலம்

பெரு நாட்டில் ‘பிசாசுகளின் இறக்கம்’ திருவிழா கோலாகலம் தென் அமெரிக்க நாடான லிமாவில்...

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு...

சூழலை கருத்தில் கொண்டு இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சூழலை கருத்தில் கொண்டு இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமைச்சர் ஜெய்சங்கர்...

கோவில்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்

கோவில்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 3 டன்...