புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமேடையில், புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 750 காளைகள் மற்றும் 269 வீரர்கள் கலந்து கொண்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி மாலை 3 மணி வரை நடைபெற்றது. போட்டியில் காளைகளை வெற்றிகரமாக அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, வெள்ளிக்காசு, கட்டில், மெத்தை, டிவி, ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியின் போது காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் என மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.