வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மை –
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் எனத் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது, வேற்றுக்கிரகவாசிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒபாமா, “வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவர்களை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை” என்று கூறினார்.
மேலும், ஏரியா 51 பகுதியில் வேற்றுக்கிரகவாசிகளை வைத்து ஆய்வு நடத்தப்படுவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அவை உண்மையல்ல என்றும், அங்கு எந்தவிதமான பாதாள ஆய்வுக் கூடங்களும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒருவரே வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக கூறியிருப்பது, உலகம் முழுவதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.