வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது
திருச்சியில், முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெட் ஃபாக்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமியின் மகன் ராஜ்மோகன் மற்றும் குடும்பத்தினர் உமா பிரித்விராஜ், லீலாவதி, கல்பனா, ஸ்ரீநிதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய நீதிபதி ஸ்ரீமதி, வழக்கறிஞர் கிருஷ்ணசாமி தங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்ததாகவும், சிறுவயது முதல் அவரை பார்த்தே வளர்ந்ததாகவும் நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்ச்சி, கிருஷ்ணசாமியின் சட்டப் பணியும் சமூக சேவையும் நினைவுகூரும் வகையில் அமைந்தது.