வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை
கன்யாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மர்ம நபரால் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழித்துறையை சேர்ந்த டிக்ஷன் என்பவர், தனது மனைவியின் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். இதனை கவனித்த மர்ம நபர், சுவர் ஏறி குதித்து வாகனத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டிக்ஷன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.