இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு அதிக பயம் இருப்பதாக கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார்.

Date:

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு அதிக பயம் இருப்பதாக கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை லீக் போட்டி குறித்து அவர் பேசுகையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு மனரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என கூறினார்.

இந்தியா 180 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் பேட்டிங் தடுமாறும் என்றும், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சை டென்னிஸ் வீரர் போல எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் தற்போது பயத்துடன் விளையாடி வருவதாக குறிப்பிட்ட அவர், Kuldeep Yadav பாகிஸ்தான் அணியின் பாதியை வீழ்த்தக்கூடிய திறன் கொண்டவர் என பாராட்டினார்.

அதேபோல், Shivam Dube-வை பந்துவீச்சில் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்திய அணி தொடர்ந்து மனரீதியான அழுத்தத்தை உருவாக்க முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.

டாஸ் வென்றால் இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் எனவும், இந்தியாவின் பேட்டிங் வரிசை மிகவும் தரமானதாக இருப்பதாகவும் பாஸ்கி தெரிவித்தார்.

மொத்தத்தில், இளம் இந்திய வீரர்களின் திறமையை கண்டு பாகிஸ்தான் அணி அதிகமாக அச்சமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர்: அமித்ஷா

ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர்: அமித்ஷா ராகுல்...

மகா சிவராத்திரி விழா: கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம்

மகா சிவராத்திரி விழா: கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம் ஈஷா...

மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ‘ஹர ஹர மகாதேவ்’ முழக்கம்

மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ‘ஹர ஹர மகாதேவ்’ முழக்கம் மகா...

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்கும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் பாதுகாப்பு பலம் அதிகரிப்பு

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்கும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் பாதுகாப்பு பலம்...