திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்
திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நடராஜர் சன்னதி முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பான நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததுடன், நாட்டிய நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதனால் கோயில் வளாகம் பக்தி மற்றும் கலாச்சார உற்சாகத்தில் திளைத்தது.