• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

அஜித் தோவலின் ராஜதந்திர வெற்றி : குற்றத் தடுப்பில் இந்தியா–கனடா இணைப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 875 📋

அஜித் தோவலின் ராஜதந்திர வெற்றி : குற்றத் தடுப்பில் இந்தியா–கனடா இணைப்பு

இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சட்டம்–ஒழுங்கு மற்றும் எல்லை கடந்த குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கூட்டு செயல்திட்டத்தை இந்தியாவும் கனடாவும் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளன. இதுதொடர்பான விரிவான செய்தி தொகுப்பு வெளியாகியுள்ளது.

Related posts

நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!

நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!

மே 30, 2026
“மாறுபட்ட கருத்துகள் ஜனநாயகத்தின் இயல்பு” – கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பக்க முடக்க விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய பிரசார பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கருத்து!

“மாறுபட்ட கருத்துகள் ஜனநாயகத்தின் இயல்பு” – கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பக்க முடக்க விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய பிரசார பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கருத்து!

மே 30, 2026

2023 ஆம் ஆண்டு கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதியாக கருதப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை, பொருளற்றவை என இந்தியா கடுமையாக மறுத்தது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுடனான தூதரக உறவுகளை தற்காலிகமாக இடைநிறுத்திய இந்தியா, அந்நாட்டிலிருந்த தனது உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதர்களை தாய்நாட்டுக்கு அழைத்தது. அதேபோல், இந்தியாவில் பணியாற்றி வந்த கனடா தூதர்களையும் நாடு விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னி, இந்தியாவுடன் உறவை சீர்படுத்தும் முயற்சிகளை தொடங்கினார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த மார்க் கார்னி, இருநாடுகளின் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர், இரு நாடுகளின் தலைநகரங்களிலும் தூதரக உயர் ஆணையர்களை மீண்டும் நியமிக்க இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

மேலும் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போதும் மோடியும் கார்னியும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, உயர்ந்த இலக்குகளை கொண்ட விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்து பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியாவும் கனடாவும் சம்மதம் தெரிவித்தன.

இதற்கிடையில், கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்தார்.

அதே காலகட்டத்தில், கனடா பிரதமரின் துணைச் செயலராகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகராகவும் இருந்த நதாலி ட்ரூயின் இந்தியாவுக்கு வருகை தந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் நதாலி ட்ரூயின் கனடாவின் பிரான்ஸ் மற்றும் மொனாக்கோவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார். தனது புதிய பொறுப்புக்காக பாரிஸ் செல்லத் தயாராகி இருந்த வேளையில், கனடாவிலேயே அவரைச் சந்தித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான விவகாரங்களில் இருநாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை உருவாக்கவும், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளுக்கான தொடர்பு அதிகாரிகளை நியமித்து செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து முடிவு செய்துள்ளன.

மேலும், உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தை விரிவுபடுத்தவும், சட்ட அமலாக்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் போன்ற ஆபத்தான போதைப்பொருட்களின் சட்டவிரோதச் சுழற்சி, எல்லை கடந்த போதைப் பயங்கரவாத குழுக்கள் உள்ளிட்ட குற்றங்களை கட்டுப்படுத்த இந்த கூட்டு செயல் திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உள்நாட்டு சட்ட விதிகளுக்கும் சர்வதேச பொறுப்புகளுக்கும் உட்பட்டு, இணைய பாதுகாப்பு கொள்கைகள், சைபர் பாதுகாப்பு சவால்கள் தொடர்பான தகவல் பகிர்வை ஒழுங்குபடுத்தவும், மோசடி மற்றும் குடியேற்ற அமலாக்கம் குறித்த ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்தவும் இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.

மேலும், கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள அஜித் தோவலின் இந்த கனடா பயணம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலனில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

ராமநாதபுரத்தில் தேர்தல் முன்னிட்டு திமுக தரப்பில் இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்

Next Post

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு

Next Post

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

மே 30, 2026
நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!

நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!

மே 30, 2026
தமிழகத்தில் அதிரடி: சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் அதிரடி: சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

மே 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!
  • நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!
  • தமிழகத்தில் அதிரடி: சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

மே 30, 2026
நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!

நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN