ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

Date:

ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நிலுவையில் உள்ள பில்களை பரிசீலித்து ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக கண்காணிப்பு பொறியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் குக்கட்பல்லி மண்டலத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் பொட்டுத்துரி சின்னா ரெட்டி என்பவரே கைது செய்யப்பட்ட நபர் ஆவார்.

ஒரு ஒப்பந்ததாரர் நிறைவு செய்த பணிகளுக்கான ரூ.1.40 கோடி மதிப்பிலான நிலுவை பில்களை சரிபார்த்து அனுமதி வழங்க, ரூ.30 லட்சம் லஞ்சமாக அவர் கோரியதாக கூறப்படுகிறது.

இதில் முதல் தவணையாக ரூ.15 லட்சத்தை, அவரது கணினி ஆபரேட்டர் மூலம் பெற்றுக் கொண்ட போது, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள் முறையீடு

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள்...

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை...

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ...

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்” ஆறு...