கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவி வசிக்கும் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் பிரபல நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், அந்த நிறுவன உரிமையாளரின் மகள் தங்கியிருக்கும் சென்னை தாம்பரம் அருகேயுள்ள சேலையூர் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலையூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவியின் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் விரிவான சோதனையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரத்வாஜ் தெருவில் உள்ள அந்த வீட்டில், துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎப் காவலர்களின் கண்காணிப்புடன், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.