உலக சாதனைகள் நிகழ்த்தி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குறும்பப்பட்டியில், யுனிவர்செல் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 2,500 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, தூய்மை மற்றும் செல்போன் பயன்பாடு குறித்து இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தி அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளனர்.
இந்த சிறப்பான சாதனைகளை
எலைட் உலக சாதனைகள்,
ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்,
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்,
தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
ஆகிய நான்கு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, உலக சாதனைச் சான்றிதழ்களை வழங்கியுள்ளன.
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தூய்மை மற்றும் பொறுப்பான செல்போன் பயன்பாடு போன்ற முக்கியமான கருத்துகளை உலக அளவில் எடுத்துச் சென்ற மாணவ, மாணவிகளின் முயற்சி பாராட்டுக்குரியது.
இந்த உலக சாதனைகளை நிகழ்த்திய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், யுனிவர்செல் கல்வி நிறுவனத்திற்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
இத்தகைய சாதனைகள் மேலும் பல வெற்றிகளுக்கான தொடக்கமாக அமையட்டும்.