• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மே 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

பகவத் கீதையை மையமாக கொண்ட குழந்தைகளின் நாடகம், நடனம் – பாராட்டுகள் குவிந்த சிறப்பான நிகழ்வு

athibantv by athibantv
ஜனவரி 26, 2026
in Tamil-Nadu
0

பகவத் கீதையை மையமாக கொண்ட குழந்தைகளின் நாடகம், நடனம் – பாராட்டுகள் குவிந்த சிறப்பான நிகழ்வு

சென்னை தியாகராய நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டு, கைத்தட்டல்களை அள்ளியது.

Related posts

சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை

தமிழகத்தின் புதிய சக்தி: விஜய்க்கு மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் – கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் – கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!

மே 4, 2026

வாழ்க்கையின் கடமைகள், தர்மம், கர்மா, பக்தி ஆகியவற்றை எளிய முறையில் எடுத்துரைக்கும் ஆன்மிக வழிகாட்டியான பகவத் கீதையை, இளம்வயது குழந்தைகள் தங்களின் நடிப்பு மற்றும் அசைவுகளின் மூலம் உயிர்ப்பித்து காட்டியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

சென்னையின் அனைத்து கிளைகளிலும் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்களின் திட்டப் பணிகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில், Pre KG முதல் LKG வரை பயிலும் மழலைகள் பங்கேற்ற பகவத் கீதையை மையப்படுத்திய நாடகம் நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த பழமையான கலாச்சாரத்தை நினைவூட்டும் விதமாக அமைந்த நாடகம் பார்வையாளர்களை நெகிழ வைத்தது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி திட்டப் பணிக்காக பகவத் கீதையை அறிந்து கொள்ளும் விதத்தில் பக்தி முறைகளை தத்ரூபமாக நடித்துக் காட்டியது, திரையில் காணும் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமைந்தது.

மேலும், 4 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சமஸ்கிருதத் துறை மாணவர்கள், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள முக்கிய கருத்துகள், குருக்ஷேத்திரப் போர், விஷ்ணுவின் அவதாரங்கள், ஆழ்வார்கள், துரியோதனின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட நிகழ்வுகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

இன்றைய கால குழந்தைகளின் உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களை சுட்டிக்காட்டி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு விளைவிக்கும் தீமைகளை விளக்கும் சிறப்பு நாடகமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்துக்கள் மட்டுமின்றி, அனைத்து மக்களுக்கும் பொதுவான வாழ்க்கைத் தத்துவத்தை கற்றுத் தரும் பகவத் கீதையை பள்ளி திட்டமாக எடுத்துக் கொண்டு, நாடகங்கள் மற்றும் கண்காட்சிகள் மூலம் வெளிப்படுத்திய இந்த மழலைச் செல்வங்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெருமையையும் பெற்றனர்.

பகவத் கீதை எல்லோருக்குமானது என்பதை அழகாக உணர்த்திய குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Related

Tags: Tamil-Nadu
Previous Post

வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடரும் வன்முறைக்கு கடும் கண்டனம்

Next Post

உலக சாதனைகள் நிகழ்த்தி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

Next Post

உலக சாதனைகள் நிகழ்த்தி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை

தமிழகத்தின் புதிய சக்தி: விஜய்க்கு மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் – கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் – கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!

மே 4, 2026
தலைநகர் மற்றும் தென் மாவட்டங்களில் த.வெ.க ஆதிக்கம்

த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவா? – கிரீஷ் சோடங்கர் அளித்த பரபரப்புத் தகவல்

மே 4, 2026
[athiban_popular_posts]

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகத்தின் புதிய சக்தி: விஜய்க்கு மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து!
  • தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் – கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!
  • த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவா? – கிரீஷ் சோடங்கர் அளித்த பரபரப்புத் தகவல்

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை

தமிழகத்தின் புதிய சக்தி: விஜய்க்கு மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் – கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் – கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி!

மே 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்