‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பின் பாகிஸ்தான் அவசர நடவடிக்கைகள் – USA உறவை மீட்டெடுக்க முயற்சி
2025-ம் ஆண்டு மே மாதம் இந்தியா மேற்கொண்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை பாகிஸ்தானின் ராணுவ பலத்தையும், இந்தியாவின் போர் திறனையும் வெளிக்காட்டியது. இதற்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீட்டெடுக்க பாகிஸ்தான் அவசர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில், பாகிஸ்தான் தன்னை பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் புவியியல் ரீதியாக அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி என வெளிப்படுத்தியிருந்தது. அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு சிறப்பு வசதி, விரைவான அனுமதிகள் மற்றும் ராணுவ–அரசாங்க ஆதரவு வழங்கப்படும் என்றும், முக்கிய கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு செய்யவும் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் சில வாரங்களுக்குள் பலன் கொடுத்தது. 2025 ஜூனில் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் சந்தித்து மதிய உணவுக்கு அழைக்கப்பட்டார். பின்னர் கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, வாஷிங்டன் பாகிஸ்தானின் ராணுவத்தை நம்பகமான அமைப்பாக கருதுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.