எந்தக் கூட்டணியாக இருந்தாலும் வரவேற்போம் – வானதி சீனிவாசன் கருத்து!
தமிழர்களின் மொழி மட்டுமன்றி, அவர்களின் பண்பாடு மற்றும் மரபுகளை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பிரதமருக்கு எங்களின் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பிரதமர் நேரில் கலந்து கொண்டு பொங்கல் திருவிழாவை சிறப்பித்ததற்காக நன்றியை தெரிவித்தார்.
தமிழ் மொழியும், தமிழர் கலாச்சாரமும் உலக அளவில் பரவ காரணமாக இருந்தவர் பிரதமரே என அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எதிர்காலத்தில் மேலும் பல அரசியல் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க ஒரே வலுவான மாற்று சக்தி NDA தான் என்றும் தெரிவித்தார்.
NDA அணியில் இணையும் கட்சிகளை அனைவரையும் வரவேற்கத் தயாராக உள்ளோம்; எந்தக் கூட்டணியில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என டெல்லியில் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேட்டியளித்தார்