S.G. சூர்யா தாக்கப்பட்ட சம்பவம் – பாஜகவினர் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது, பாஜக மாநில இளைஞரணி தலைவர் S.G. சூர்யா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சட்ட ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகவும், அரசியல் கருத்து வெளிப்பாட்டிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறியுள்ளதாகவும் குற்றம்சாட்டி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.