தீர்ப்பளித்த நீதிபதிக்கு மிரட்டல் – இந்திய சுதந்திரத்திற்குப் பின் காணாத நிகழ்வு : ஆளுநர் ஆர்.என்.ரவி
தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் செயல், கடந்த 75 ஆண்டுகளான இந்திய சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் நிகழாதது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தின கருத்தரங்கில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அங்கு உரையாற்றிய ஆளுநர், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
மேலும், திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை பதவியிலிருந்து நீக்க முயன்றதும், அவருக்கு மிரட்டல் விடுத்ததும் இந்திய ஜனநாயக மரபில் இதுவரை இல்லாத சம்பவம் என அவர் விமர்சித்தார்.
இத்தகைய செயல்கள் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளைப் பாதிக்கும் திட்டமிட்ட முயற்சியாகும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக சாடினார்.