சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சாயல்குடி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாயல்குடி – அருப்புக்கோட்டை பிரதான சாலையிலிருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வரை பரவி உள்ள இந்த நீரோடை சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
ஆனால், காலப்போக்கில் இந்த நீரோடையின் பெரும்பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது வெறும் 2 ஏக்கர் நிலப்பரப்பே மீதமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, நீரோடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, சாயல்குடி பேரூராட்சியின் 9ஆம் வார்டு திமுக கவுன்சிலரான ஆபிதா, தனது கணவருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.