2026 ஜனவரி 1 முதல் 7 வரை வேட்டி வாரம் – ராம்ராஜ் காட்டன் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிலும் ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் “வேட்டி வாரம்” அனுசரிக்கப்படும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜன் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வேட்டி வாரத்தை முன்னிட்டு, திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புதிய வடிவமைப்பிலான வேட்டிகள் மற்றும் சட்டைகள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேட்டி–சட்டை தொகுப்புகளை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த நாகராஜன், இந்த ஆண்டு ஏழாவது முறையாக வேட்டி வாரம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
புதிய வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட வேட்டிகள் மற்றும் சட்டைகள், நாடு முழுவதும் உள்ள அனைத்து ராம்ராஜ் கிளைகளிலும் விற்பனைக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், நமது சுதேசி பாரம்பரியத்தையும் கலாச்சார அடையாளத்தையும் வளர்க்கும் நோக்கில், இளைஞர்கள் வேட்டி வார நிகழ்வுகளில் உற்சாகமாக கலந்து கொண்டு, நெசவாளர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என நாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.