நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை ‘சங்கி’ என விமர்சித்த திருமாவளவன் – கடும் நடவடிக்கை கோரல்
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை இழிவுபடுத்தும் வகையில் ‘சங்கி’ என குறிப்பிட்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்புகளிலிருந்தும் வலுப்பெற்று வருகிறது.
சமீபத்தில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமாவளவன், காவல்துறை, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகளில் சங்கப்பார்வையுடையவர்கள் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரைச் சுமந்தவர்களே சங்கிகள் எனவும் அவர் பேசினார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது அரசியல் நிறம் பூசும் வகையில் பேசிய திருமாவளவனின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுவரை தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவும் கருத்துகள் வெளிப்படுகின்றன.
மேலும், திருமாவளவன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.