மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிரான வழக்கு – ஆய்வு செயல்பாடு
கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி சென்னையில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்றம், சிலை நிறுவப்படவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, ஜனவரி 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.