வேலூர் : பனிமூட்டம் காரணமாக ஒலிபெருக்கி மூலம் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக, பள்ளிக்கொண்டா பகுதியில் உள்ள சுங்க வசூல் மையத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், வாகனங்களை இயக்கும் போது முகப்பு விளக்குகளை கட்டாயமாக ஒளிரச் செய்ய வேண்டும் என ஒலிபெருக்கி வழியாக அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பயணிகளுக்கு இலவசமாக தேநீர் வழங்கப்பட்டதுடன், பனிமூட்டம் காணப்படும் சூழலில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஓட்டுநர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.