முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அமைந்துள்ள நரிக்குடி பகுதியில், உடல்நலக் காரணமாக முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் நரிக்குடியில் உள்ள பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த அப்துல் அஜூஸ் என்பவர், அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும், எதிர்ப்பு தெரிவித்த போது அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், அப்துல் அஜூஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பரிந்துரையின் பேரில், அப்துல் அஜூஸ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.