புகையிலைப் பொருட்களுக்கு புதிய கலால் வரி – மசோதாவுக்கு மக்களவையில் அங்கீகாரம்
சிகரெட் உட்பட பல்வேறு புகையிலைப் பொருட்களுக்கு கலால் வரி விதிப்பதை நோக்கமாகக் கொண்ட மசோதாவை மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கலால் திருத்த மசோதா 2025 மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025 ஆகிய இரு மசோதாக்களையும் மக்களவையில் திங்கள்கிழமை முன்வைத்தார்.
இதையடுத்து, கலால் திருத்த மசோதா 2025 மீது விவாதத்திற்கும் ஒப்புதலுக்கும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் படி, உற்பத்தி செய்யப்படாத புகையிலைப் பொருட்களுக்கு 60–70% வரை கலால் வரி விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
அதேபோல், சுருட்டுப் புகையிலை வகைகளுக்கு 25% கலால் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும்,
- 65 மில்லி மீட்டர் நீளம் கொண்ட, ஃபில்ட்டர் இல்லாத 1000 சிகரெட்டுகளுக்கு ரூ. 2,700,
- 65–75 மில்லி மீட்டர் நீளத்தில் வரும் சிகரெட்டுகளுக்கு 1000 சிகரெட்டுக்கு ரூ. 4,500
என்ற வகையில் புதிய கலால் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.