சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலைப்பட்ட சம்பவம் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புறநகரப் பகுதியில், தன்பாலின உறவுக்காக அழைத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
கரடிக்குளம் பகுதியில் வசிக்கும் சுதந்திரகுமார் என்ற ஆசிரியர், கிரைண்டர் செயலி மூலம் கோவில்பட்டி சேர்ந்த அஜித்குமார் மற்றும் 16 வயது இளைஞருடன் அறிமுகமானார்.
பின்னர், இருவரிடமும் தன்பாலின உறவுக்கு அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து மூவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பணம் கோரியதால் ஏற்பட்ட தகராறில், அஜித்குமார் மற்றும் சிறுவன் இணைந்து சுதந்திரகுமாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.