• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை

athibantv by athibantv
நவம்பர் 30, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 4K 🔥 📋

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை

டிட்வா புயல் இலங்கையில் மக்களையும் அரசையும் பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இந்தியா “ஆப்ரேஷன் சாகர் பந்து” எனும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டமாக 12 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

இலங்கையை உலுக்கி எடுத்த இந்த புயல் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. மேலும் 150 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்க்கைத் தேவை மற்றும் சொத்துகளை இழந்து அவதியுறுகின்றனர். இதனால் நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவின் தொடக்கம் நவம்பர் 17-ஆம் தேதி. அன்றைய தினம் இடையறாத கனமழை பல பகுதிகளில் வெள்ளம் பரவச் செய்தது. அதன் பின்னர் உருவான டிட்வா புயல் நாட்டின் நிலையை மேலும் மோசமாக்கியது. பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததும் உயிரிழப்புகள் மேலும் உயரலாம் என அச்சத்தைக் கிளப்பியுள்ளது.

முக்கியமாக கேகாலை பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானைகளின் காட்சிகள், இந்த பேரழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் பல பகுதிகளில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது.

ஆயினும், இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலை வெள்ளத்தில் சிக்கியதால் கைதிகள் அவதிப்பட்டனர்; உடனடியாக போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர்.

இந்நேரத்தில் பல நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா, “ஆப்ரேஷன் சாகர் பந்து” மூலம் கூடாரங்கள், போர்வைகள், மருத்துவப் பொருட்கள், உணவு உள்ளிட்ட 12 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. கொழும்பில் உள்ள இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானத்தாங்கி கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

புயல் பாதிப்பில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கை விரைவில் மீண்டு வர வேண்டும் எனத் தெருவிக்கையுடன், மேலும் தேவைப்பட்டால் உதவிக்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி கப்பல்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளதாகவும், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

டிட்வா புயல் : பாம்பன் கடலில் ஆற்றல் மிகு அலைகள்!

Next Post

தொழில்நுட்ப கோளாறால் ஏர்பஸ் விமானங்கள் மொத்தமாக சேவை நிறுத்தம் : உண்மையில் என்ன நடந்தது?

Next Post

தொழில்நுட்ப கோளாறால் ஏர்பஸ் விமானங்கள் மொத்தமாக சேவை நிறுத்தம் : உண்மையில் என்ன நடந்தது?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!
  • “தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN