NON-AC ஸ்லீப்பர் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கல் – சென்னை கோட்டம் புதிய அறிவிப்பு

Date:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம், ரயில்களில் பயணம் செய்யும் NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கும் சுகாதாரமான படுக்கை விரிப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் வரும் 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள், தேவைக்கேற்ப குறைந்த கட்டணத்தில் படுக்கை விரிப்புகளை வாங்கிக் கொள்ளலாம்.

பயணிகளின் வசதியை உயர்த்துவது, மலிவு விலையில் படுக்கை விரிப்புகளை வழங்குவது, மேலும் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டுதல் என்பவையே இந்த முன்னோடி திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ்:

  • படுக்கை விரிப்புகள் வாங்குதல்
  • இயந்திர சுத்திகரிப்பு
  • பேக்கிங்
  • ரயிலில் ஏற்றுதல்
  • பயணிகளுக்கு வழங்குதல்
  • சேமிப்பு

என்பன அனைத்தும் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரரின் பொறுப்பில் இருக்கும்.

முதற்கட்டமாக, சென்னை கோட்டம் பராமரிக்கும் 10 ரயில்களில் இந்த சேவை மூன்று ஆண்டுகள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரயில்வேக்கு ஆண்டுதோறும் ₹28.27 லட்சம் உரிமக் கட்டணம் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர்....

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது...

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு “அகண்டா...

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீதிமன்றங்களில்...